எஸ்டி பட்டியலில் குருவிக்காரர், நரிக்குறவர் பிரிவினரை சேர்க்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. குருவிக்காரர், நரிக்குறவர் சமுதாயத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கும் மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கடந்த 15-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. எனவே நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறிய குருவிக்காரர், நரிக்குறவர் மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று சட்டமாகிய பின்னர் தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
டீக்கடை நடத்தி சம்பாதித்த பணத்தில் மனைவியுடன் உலகம் சுற்றி பிரபலமடைந்த கே.ஆர்.விஜயன் காலமானார். கேரள மாநிலம் கொச்சியில் டீ கடை வைத்து நடத்தி வந்தவர் தான் கே ஆர் விஜயன். இவருக்கு 71 வயது ஆகிறது. இவருக்கும் அவரது மனைவி மேகனாவுக்கும் திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சிறுவயதிலிருந்தே உலகை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. எனவே கடந்த 1963 ஆம் ஆண்டு டீக்கடை ஒன்றை ஆரம்பித்த விஜயன் அதன் மூலமாக கிடைத்த […]
பத்மவிபூஷண் விருது பெற்ற 99 வயதுடைய மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே காலமானார். மகாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமானவர் தான் பாபாசாகேப் புரந்தரே. இவர் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி குறித்த தனது படைப்புகள் மூலமாக மிகவும் புகழ்பெற்றவர். மேலும் 2019 ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த தொண்ணூற்று ஒன்பது […]