Corona update: கேரளாவில் மேலும் 13 பேருக்கு நோய்தொற்று உறுதி !

கேரளாவில் மேலும் 13 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் மேலும் 13 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்  கொரோனா பாதிப்பால் 1937 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1101 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று(ஏப் 27) மட்டும் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 482ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.