இர்பான் கானின் மறைவு சினிமா உலகிற்கு மிகப்பெரிய இழப்பு ! – நரேந்திர மோடி ட்விட்

இர்பான் கானின் மறைவு சினிமா உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என நரேந்திர மோடி ட்விட்

இர்பான் கானின் மறைவு சினிமா உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என நரேந்திர மோடி ட்விட்

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்.29) உயிரிழந்தார். இதற்கு ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் என அனைவரும் ட்விட்டர் மூலம் கண்ணீர்  அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இர்பான் கானின் மறைவுக்கு ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இர்பான் கானின் மறைவு சினிமா மற்றும் நாடக உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். வெவ்வேறு ஊடகங்களில் பல்துறை நடிப்பால் அவர் நினைவுகூரப்படுவார். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

unknown node
இர்பான் கானின் மறைவு சினிமா உலகிற்கு மிகப்பெரிய இழப்பு ! – நரேந்திர மோடி ட்விட்