ரூ.100 முதலீடு செய்யுங்கள்..!ரூ.2.8 லட்சம் லாபம் பெறுங்கள்- இந்திய தபால் துறை...!

Invest Rs.100 in the National Savings Scheme of the Indian Postal Service and get a profit of up to Rs.2 lakhs.

இந்திய தபால் துறையின், தேசிய சேமிப்பு திட்டத்தில் ரூ.100 முதலீடு செய்து ரூ.2 லட்சம் வரையிலான லாபத்தைப் பெறுங்கள்.

இந்திய தபால் துறையானது மக்களுக்கு தொடர்ந்து பல அருமையான திட்டங்களை வழங்கி வருகிறது.அந்த வரிசையில்,தேசிய சேமிப்பு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

தேசிய சேமிப்பு திட்டத்தில்,குறிப்பிட்ட அளவிலான பணத்தை நாம் முதலீடு செய்ய முடியும்.மேலும்,முதலீடு செய்யும் பணத்திற்கு நிகராக பத்திரம் நமக்கு தரப்படும்.5 ஆண்டுகள் கழித்து நாம் முதலீடு செய்யும் பணத் தொகையானது வட்டியுடன் திரும்பக் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல்,இத்திட்டத்தில் கடனுதவியும் பெற்றுக்கொள்ளலாம்.

இத்தகைய சேமிப்பு திட்டத்தில் சேர 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.இதில் குறைந்த பட்ச முதலீடாக ரூ.100 செலுத்த வேண்டும்.ஆனால்,அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.மேலும்,முதலீடு செய்யும் மொத்த தொகையில் 60% வரை கடனுதவியும் பெற்றுக் கொள்ளலாம்

உதாரணமாக,நாம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து 6.8% வட்டியுடன் ரூ.1.8 லட்சம் வரையிலான பணத் தொகை கிடைக்கும்.