இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது.

உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,490 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,677 பேர் ஆக உள்ளது.

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,42,032 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,20,00,92,109டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 47,431 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.