#Breaking:மக்களே கவனம்…இந்தியாவில் மேலும் 8,084 பேருக்கு கொரோனா;10 பேர் பலி!

Default Image

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 8,582 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 8,084 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,32,30,101 ஆக பதிவாகியுள்ளது எனவும்,தினசரி நேர்மறை வீதம் 3.24% ஆக உயர்ந்துள்ளது எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • மேலும்,கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 4 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,771 ஆக பதிவாகியுள்ளது.
  • அதைப்போல,கடந்த ஒரே நாளில் 4,592 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,26,57,335 ஆக பதிவாகியுள்ளது.அதன்படி,மீட்பு விகிதம் தற்போது 98.68% ஆக அதிகரித்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 47,995 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாட்டில் இதுவரை 1,95,19,81,150 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும்,இந்தியாவில் ஒரே நாளில் 11,77,146 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்