சீனாவுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் படைகள் மூலம் பதிலடி -பிபின் ராவத்

சீனாவுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் படைகள் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்று பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லையினல் இந்திய-சீன வீரர்கள் இடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரா்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதனை, இதுவரை சீன அதிகாரப்பூா்வமாக அறிவிக்கவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் இந்திய-சீனப் படைகள் குவிக்கப்பட்டன. இதனால், பதற்றம் நிலவியது. இதையடுத்து, இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்திலும், இரு நாட்டு தூதரக அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முடிவில், பிரச்னைக்குரிய எல்லைப் பகுதியில் இருந்து சீன ராணுவம் தனது படைகளை திரும்பப் பெறத் தொடங்கியது. ராணுவ முகாம்கள் போன்றவற்றை சீன ராணுவம் அப்புறப்படுத்தி பின்வாங்கியது. சமீபத்தில் இருநாட்டு ராணுவமும் எல்லையில் தங்கள் படைகளை விலகி கொண்டது. இரு நாடும் படைகளை விலகி கொண்டதால் சற்று பதற்றம் குறைந்தது.
இந்நிலையில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பேட்டி ஓன்று அளித்தார்.அதில் அவர் கூறுகையில், எல்லைகளில் அத்துமீறல்கள், ஊடுருவல்களை தடுப்பதும்,பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதுமே அரசின் அணுகுமுறை ஆகும் . சீன ராணுவத்தின் அத்துமீறல்களை லடாக் எல்லையில் முறியடிக்க ராணுவ நடவடிக்கை எடுக்க வாய்ப்பும் உள்ளது. ராணுவ நிலையிலும் அரசு நிலையிலும் நடைபெறும் பேச்சுகள் பலனளிக்கவில்லை என்றால் மட்டுமே ராணுவ நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025