சகோதரருடன் உறவு ..12 வயது சிறுமி கருவை கலைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!

கேரளாவில் 12 வயது சிறுமி தனது மைனர் சகோதரனுடன் உடலுறவு வைத்திருந்தார். அதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமானார். இதற்கிடையில் அந்த சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அந்த சிறுமியின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி காத்திருந்தது.
பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மகளின் கர்ப்பத்தை மருத்துவமனை மூலம் கலைக்க முடிவு செய்து அந்த சிறுமியின் பெற்றோர் சார்பில் கர்ப்பத்தை கலைக்க கேரள உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் சிறுமியின் கர்ப்பத்தை பரிசோதிக்க மருத்துவ குழு அமைக்க உத்தரவிட்டிருந்தது.
மருத்துவ குழு அமைக்கப்பட்ட பிறகு சிறுமி 34 வார கர்ப்பமாக இருப்பதாகவும், கரு முழுமையாக வளர்ச்சியடைந்துள்ளது என மருத்துவ குழு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, 12 வயது சிறுமியின் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கமுடியாது என தெரிவித்தது. இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், “கரு 34 வாரங்கள் ஆகிறது, முழுமையாக வளர்ச்சியடைந்து, கருப்பைக்கு வெளியே கரு வளர தயாராகி உள்ளது. இந்த நிலையில் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அந்த சிறுமியை அவரது சகோதரர் நெருங்க விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் தொடர்ந்து உதவி பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியது”
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025