ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.42 மணிக்கு “ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12” என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தகவல் தெரிவித்துள்ளது.
unknown nodeISRO GSLV-F12 [Image source : Twitter/@airnewsalerts]
அதாவது, இந்த ராக்கெட் ஆனது என்.வி.எஸ்.-01 என்ற வழிகாட்டி செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது. புவிநிலைச் சுற்றிப் பாதையில் 36,000 கி.மீ உயரத்தில் இதனை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
unknown nodeஏற்கனவே, ஜிஎஸ்எல்வி ஏபி12 ராக்கெட் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. இந்நிலையில், 2,232 கிலோ எடை கொண்ட NAVIK-01 செயற்கைக்கோள் 26 மணி நேர கவுன்ட் டவுனுக்குப் பிறகு, இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவ தயாராக உள்ளது.
unknown nodeGSLV-F12 [Image source : Twitter/@airnewsalerts]
ராக்கெட்டின் ஒவ்வொரு நிலைக்கான இறுதிக்கட்ட சோதனை முடிந்ததும், ஏவுகணை அங்கீகார வாரியம் (LAB) ஏவுதல் பணியை இஸ்ரோவிடம் ஒப்படைக்கும். வெளியீட்டு அங்கீகார வாரியம் ஆர்முகம் ராஜராஜன் தலைமையில் ஆய்வக கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
