ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு திடீரென வட்டியை உயர்த்திய கனரா வங்கி!

Canara Bank, India's leading buyer, has abruptly raised interest rates on its fixed deposit schemes from 27-th November.

இந்தியாவில் முன்னணி வாங்கி நிறுவனமான கனரா வங்கி, தங்களின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு திடீரென வட்டியை உயர்த்தியது.

அண்மையில் கனரா வங்கி, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கடன் வட்டி விகிதத்தை குறைத்து. இந்த திட்டம் மூலம் பல பயனர்கள் பலனடைந்தனர். இந்தநிலையில், தற்பொழுது ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டியை உயர்த்துவதாக அறிவித்தது.

இதுகுறித்த ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டத்தில், ரெபோ விகிதம் குறைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி குறையாது என தெரிவிக்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி உயர்த்தப்படுவதாக கனரா வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி இந்த திட்டம், 27ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும், இரண்டு கோடி ரூபாய்க்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு மட்டுமே 5.40% வட்டி உயர்வு வழங்கப்படும். அதுமட்டுமின்றி, சீனியர் சிட்டிசன்களுக்கு 5.90% வட்டி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வங்கிகளை விட, கனரா வங்கி அதிக வட்டியை வழங்குகிறது.