முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர்.
முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்கள் இணைய பக்கத்தில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர். அவரது வாழ்க்கை லட்சக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node