உச்சகட்ட அதிர்ச்சி ! ஒரே நாளில் 2.17 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு ! 1,185 பலி

Extreme shock! Corona vulnerability crossed 2.17 lakh in a single day! 1,185 killed

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்,  2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,185 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 1,18,302  பேர் குணமடைந்து,மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஆறாவது நாளாக 1.5 லட்சத்துக்கும் மேல் கொரோனா தொற்று பதிவாகி இருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.