23 – ஆம் தேதி வரை கேரளாவில் முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

Kerala Chief Minister Pinarayi Vijayan has said that the curfew has been extended till the 23rd to further control the severity of the corona.

கொரோனாவின் தீவிரத்தை மேலும் கட்டுப்படுத்தும் விதமாக வருகிற 23-ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள மக்களை பாதுகாப்பதற்காகவும், நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கும் கடந்த சில நாட்களாக முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்நிலையில், கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளதால் கடந்த 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு அம்மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது.

ஏற்கனவே முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கேரளாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாததால் தற்போது மீண்டும் வருகிற 23-ஆம் தேதி வரையிலும் இந்த முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கொரோனாவின் தீவிரம் கட்டுக்குள் வராத பகுதிகள் மற்றும் நோயாளிகள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தேவைப்படுவதாகவும், எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை, அதாவது 16 ஆம் தேதி அன்று முதல் மூன்று மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.