கே.ஜி.எப் 2வால் பாக்கெட் பாக்கெட்டாக சிகெரட் பிடித்த 15 வயது சிறுவன்.! இறுதியில் என்ன ஆனது தெரியுமா.?!

நடிகர் யாஷ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றியடைந்த கேஜிஎப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் இரண்டாம் பாகம் கடந்த மாதம் 14-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் பலகாட்சிகளில் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் நடித்த யாஷ் கையில் துப்பாக்கியுடன் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் அமைந்திருக்கும்.
இந்த சிகரெட் காட்சிகள் எல்லாம் நாம் பார்க்கும் போது வேணுமென்றால், மாஸாக தான் இருக்கும். அப்படி ஒரு காட்சியை நாமும் ராக்கி பாய் போல சிகரெட் பிடித்தால் மாஸாக இருக்கும் என்று ஹைதராபாத்தை சேர்ந்த சிறுவனம் ஒருவர் ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதி தள்ளி உள்ளான்.
ஹைதரபாத் மாநிலத்தில் உள்ள ராஜேந்திரநகரில் வசிக்கும் 15 வயதுடைய இந்த சிறுவன் இரண்டு நாட்களில் மூன்று முறை கேஜிஎப் 2 திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைபிடித்தார். இதனால் உடல் நல குறைவு ஏற்பட்டு அந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பிறகு, மருத்துவர்கள் அந்த சிறுவனிடம் இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024