#Corona:மக்களே மிகக் கவனம்…கொரோனாவுக்கு ஒரே நாளில் 47 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,135பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 13,734 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 17,135 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,37,057ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,26,477 பேர் ஆக உள்ளது.

மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை  4,34,03,610 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,04,84,30,732கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 23,49,651 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.