பாஜக-கம்யூனிஸ்ட் இடையே மோதல்.. 3 பத்திரிகையாளர்கள் உட்பட 30 பேர் காயம்!

Police said the attacks were continued till midnight but after the movement of additional forces, the situation came under control.

கிழக்கு அகர்தலாவில் பாஜக-கம்யூனிஸ்ட் இடையே நடைபெற்ற மோதலில் மூன்று பத்திரிகையாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திரிபுரா மாநிலம், கிழக்கு அகர்தலாவில் உள்ள கயர்பூர் பகுதியில் பாஜக-கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே கடும் மோதல் நடைபெற்றது. ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி தாக்குதலில் ஈடுபட்டனர். மதியம் தொடங்கிய இந்த மோதல், நள்ளிரவு வரை  நடைபெற்றதாகவும், இந்த மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கிழக்கு அகர்தலாவில் நடந்த இந்த தாக்குதல் நள்ளிரவு வரை தொடர்ந்ததாகவும், இதில் செய்திகளை சேகரிக்க சென்ற 3 பத்திரிகையாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 10 வீடுகள், சில மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்தாக கூறப்பட்டுள்ளது. பின்னர், கூடுதல் படைகளை அமர்த்திய பின் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும் போலீசார், தங்களின் விசாரணையைத் தொடங்கினர்.