சீனா நாளை 5 இந்தியர்களை ஒப்படைக்கிறது – கிரேன் ரிஜிஜு.!

Default Image

அப்பர் சுபன்சிரியில் இருந்து காணாமல் போன 5 இராணுவ வீரர்கள் சீனா நாளை ஒப்படைக்க உள்ளனர்.

செப்டம்பர் 2-ஆம் தேதி கவனக்குறைவாக சீனா பக்கத்திற்குச் சென்ற 5 இந்திய வீரர்கள் தங்கள் பக்கத்தில் இருப்பதை சீன ராணுவம் இரண்டு நாள்கள் முன் உறுதிப்படுத்தியது. அவர்கள் விரைவாக முறைப்படி மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என இந்திய இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 5 இராணுவ வீரர்களை நாளை சீன இராணுவம் ஒப்படைக்க உள்ளதாகவும், இந்த ஒப்படைப்பு நாளை எப்போது வேண்டுமானாலும் நியமிக்கப்பட்ட இடத்தில் நடைபெறும் என  மத்திய அமைச்சரும், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி.யுமான கிரேன் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்