வேளாண் சட்டங்கள்: டிசம்பர் 30-ல் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு!

The federal government has called on farmers to come to talks on the repeal of agricultural laws on the 30th at 2 p.m.

வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக வரும் 30 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 33 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசு 5 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தியது. ஆனால் அவை பலனலிக்கவில்லை.

வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை இந்த போராட்டம் தொடருவதாக விவசாயிகள் அமைப்பு தெரிவித்து வருகின்றது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக வரும் 29 ஆம் தேதி மத்திய அரசுடன் டெல்லியில் போராடும் விவசாய அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்த தயார் என விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ள நிலையில், வரும் 30ஆம் தேதி மதியம் 2 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய அமைப்புகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.