சிபிஐ விசாரணை : மாநில அரசின் அனுமதி தேவை! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சிபிஐ விசாரணைக்கு மாநில அரசின் அனுமதி தேவை.

சிபிஐ விசாரணைக்கு மாநில அரசின் அனுமதி தேவை.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், மத்திய புலனாய்வு அமைப்பு, எந்த மாநிலத்திலும் குற்றங்கள் குறித்து தாமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம். அதேவேளையில் மாநில அரசுக்கு, இந்த அதிகாரத்தை வாபஸ் பெறுவதற்குஉரிமை உள்ளது. இந்நிலையில்,  உச்ச நீதிமன்றத்திற்க்கு, மாநில அரசு ஒப்புதல் பெறாமலேயே எந்த மாநிலத்திலும் சிபிஐ விசாரணை நடத்துவது தொடர்பாக ஒரு வழக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பு என்னவென்றால்,டெல்லி சிறப்பு காவல் சட்டத்தின் பிரிவு  6-ன் கீழ் மாநில அரசு அனுமதி இல்லாமல், சிபிஐ அந்த மாநிலத்துக்குள் விசாரணை நடத்த முடியாது என்றும், மாநில அரசு இந்த 6-வது பிரிவின் கீழ் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து விட்டால், சிபிஐ தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், மாநில அரசின் ஒப்புதலைப் பெற்ற பின்புதான் விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டில், அப்போதைய சந்திரபாபு நாயுடு அரசு, டெல்லி சிறப்பு காவல் சட்டப் பிரிவை பயன்படுத்தி ஆந்திராவுக்கு சிபிஐ விசாரணை நடத்துவதற்கான அனுமதியை ரத்து செய்தது.  மத்திய பாஜக அரசு, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக சிபிஐ-யை பயன்படுத்தக் கூடும் என்று எண்ணி, முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள்,  சந்திரத்பாபு நாயுடு உத்தரவிட்டது போலவே, மேற்கு வங்கத்திலும், உத்தரவை பிறப்பித்தார். தற்போது காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் சிபிஐ விசாரணைக்கான பொதுவான அனுமதியை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.