பட்ஜெட் தாக்கல் : தங்கம், வெள்ளி மீதான வரி குறைப்பு…!
தங்கம் இறக்குமதி மீதான வரி 12.5 சதவீதத்திலிருந்து, 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று காலை 11 மணியளவில், 2021-2022-க்கான நிதி அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலையை பழைய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனையடுத்து, தங்கம் இறக்குமதி மீதான வரி 12.5 சதவீதத்திலிருந்து, 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.