#BIG BREAKING: பிரணாப் முகர்ஜி காலமானார்..!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிஆகஸ்ட் 10- ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற செய்ய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்பொழுது, பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரணாப் முகர்ஜிக்கு வென்டிலேட்டரில் மூலம்  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து பிராணாப் முகர்ஜியின் உடல் நிலை குறித்து தகவல் தெரிவித்து வந்த நிலையில், சமீபத்தில் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கோமா நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று வெளியிட்ட அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்து அவர் நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் அதிர்ச்சியில் இருக்கிறார் என்று ராணுவ மருத்துவமனை தெரிவித்த நிலையில், தற்போது முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். இந்த தகவலை பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

unknown node