கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் – குடியரசு தலைவர் உத்தரவு!

President Ramnath Govind has appointed new governors for eight states, including Karnataka.

கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, கர்நாடக மாநில புதிய ஆளுநராக தாவர்சந்த் கெலாட், மத்திய பிரதேச ஆளுநராக மங்குபாய் ஜாகன்பாய் படேல், மிசோரம் ஹரிபாபு, ஹிமாச்சல் ராஜேந்திரன் விஸ்வநாதன், மிசோரம் ஆளுநராக இருந்த ஸ்ரீதரன் பிள்ளை கோவா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், திரிபுரா ஆளுநராக சத்ய தேவ் நாராயன் ஆர்யா, ஜார்கண்ட் ரமேஷ் பயஸ், ஹரியானா ஆளுநராக பண்டாரு தத்தாத் ரேயா ஆகிய 8 மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

unknown node