ஆந்திர பிரதேசம் : பிளாஸ்டிக் பை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து...!

A fire broke out at a plastic bag manufacturing factory in Andhra Pradesh.

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிளாஸ்டிக் பை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள விஜயவாடா நகருக்கு அருகே உள்ள கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் மண்டலத்தில் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, கிருஷ்ணா மாவட்டம், தெம்பள்ளியில் உள்ள பிளாஸ்டிக் பை தயாரிக்க கூடிய நிறுவனமான விஜயா பரிசில் தீவிபத்து ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் மளமளவென்று தீ பரவ தொடங்கியதும் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.