இன்று ஆந்திர மாநில காவல்துறையில் உள்ள காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை இருப்பவர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுகிறது.
unknown nodeஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையின் கீழ் ஆந்திராவில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
unknown nodeகுறிப்பாக தான் பதவி ஏற்ற நாள் முதலே அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார்.சுகாதாரத்துறையில் பணிபுரியும் பணியாளர்களின் ஊதியத்தை ரூ.3000 -லிருந்து ரூ.10000-மாக உயர்த்தினார்.மேலும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்கே சென்று விநியோகிக்கப்படும் என்று அறிவித்தார்.வரலாற்றில் 5 துணை முதல்வர்கள் நியமனம் செய்து ஜெகன்மோகன் அதிரடி உத்தரவிட்டார்.அவர்களும் பதவி ஏற்றுள்ளனர்.மேலும் பல திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளார்.
unknown nodeஇந்நிலையில் ஆந்திர மாநில காவல்துறையில் உள்ள காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை இருப்பவர்களுக்கு வார விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.