டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய தடகள வீரர்கள் தாயகம் திரும்பினர்.!

All the Indian athletes who participated in the Tokyo Olympics and won medals arrived in Delhi.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கங்களை வென்ற இந்திய தடகள வீரர்கள் அனைவரும் டெல்லி வந்தடைந்தனர்.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் நேற்று முடிவடைந்த நிலையில், இதில் பங்கேற்ற இந்திய தடகள வீரர்கள் டெல்லி திரும்பினர். இப்போட்டியில் நீரஜ் சோப்ரா (தங்கம்), பஜ்ரங் புனியா (வெண்கலம்), மீராபாய் சானு (வெள்ளி), பிவி சிந்து (வெண்கலம்), லவ்லினா போர்கோஹெய்ன் (வெண்கலம்), ஆண்கள் ஹாக்கி அணி (வெண்கலம்) மற்றும் ரவிக்குமார் தஹியா (வெள்ளி) பதக்கங்களை வென்றனர்.

இந்த நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கங்களை வென்ற இந்திய தடகள வீரர்கள் அனைவரும் டெல்லி வந்தடைந்தனர். விளையாட்டுப் போட்டிகளில் மிகச் சிறந்த செயல்திறனைக் காட்டிய இந்தியக் குழுவை பிரதமர் மோடி பாராட்டினார். அதுமட்டுமில்லாமல், ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் டெல்லியில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இந்த பாராட்டு விழா டெல்லி அசோகா ஹோட்டலில் நடைபெறும்.