கடற்கரையில் நடந்த சோதனையில் ஆகாஷ் ஏவுகணை வெற்றி..!

The missile hit and destroyed the target precisely during the test on the coast of Odisha. The DRDO said the test was successful.

இந்திய ராணுவத்திற்கு தேவையான தடவாளங்களை தயாரிக்கும் டிஆர்டிஓ ஆகாஷ்-என்ஜி (New Generation) ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையின் சோதனை இன்று ஒடிசாவில் நடைபெற்றது.

ஒடிசா கடற்கரையில் நடைபெற்ற பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இதைத்தொடர்ந்து,ஆகாஷ்-என்ஜி ஏவுகணை தரையில் இருந்து வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும்சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.