#Breaking:மக்களே ரிலாக்ஸ்…மீண்டும் 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா;ஆனால்,17 பேர் பலி!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 12,781 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 9,923 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,33,19,396 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
- மேலும்,கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 18 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆக குறைந்துள்ளது. மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,890 ஆக பதிவாகியுள்ளது.
- அதைப்போல,கடந்த ஒரே நாளில் 7,293 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,27,15,193 ஆக பதிவாகியுள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 79,313 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாட்டில் இதுவரை 1,96,32,43,003 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும்,இந்தியாவில் ஒரே நாளில் 13,00,024 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.