குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்! கதிகலங்க வைத்த அதிர்ச்சி வீடியோ!

மகாராஷ்டிரா : டோம்பிவிலியில் பெண் ஒருவர் கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த பெண் வேதனை அடைந்து இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
தானே நகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட டோம்பிவிலி மன்படா காவல் நிலையப் பகுதியை சேர்ந்த ப்ரீத்தி உமாபாரதி என்ற பெண்ணுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து போன அந்த பெண் பால்கனியின் விளிம்பில் நின்று கொண்டு கீழே விழுவதற்கு முயற்சி செய்தார்.
அப்போது அங்கிருந்தவர்கள் வேண்டாம் அவசர பட்டு இந்த முடிவை எடுக்காதீர்கள் என்பது போல கூறியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்வதை எல்லாம் கொஞ்சம் கூட கேட்காத ப்ரீத்தி உமாபாரதி மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். இந்த சம்பவத்தை அருகில் உள்ள பிளாட்டில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
கீழே விழுந்த பெண்ணிற்கு தலையில் அடிபட்டு மயக்கம் அடைந்தார். இந்த சம்பவத்தை அடுத்து, அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவலை கொடுக்க இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கிடைத்த தகவலின்படி, அந்த பெண் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
பெண் தற்கொலை செய்துகொள்ளும் அதிர்ச்சியான அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
(குறிப்பு ) வீடியோ உங்கள் மனநிலையை கலைக்கும் வகையில் இருப்பதால் உங்கள் மனநிலைக்கு ஏற்றபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
Woman Attempts Suicide By Jumping Off 4th Floor Over Family Dispute In Dombivli; Shocking VIDEO Surfaces#Dombivli #SuicideAttempt #Woman #Family #Dispute #video @fpjindia pic.twitter.com/D78LKBEmO5
— Donjuan (@santryal) June 23, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!
February 22, 2025
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025