கடன்களை திருப்பி வழங்குவதில் பெண்கள் டாப்.! வெளியான சர்வே ரிப்போர்ட்.!

வங்கிகளில் கடன்களை வாங்கி திருப்பி செலுத்துவதில் ஆண்களை விட பெண்களே அதிக அக்கறை கொண்டவர்கள் என ஒரு சர்வே ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

வங்கிகளில் கடன்களை வாங்கி திருப்பி செலுத்துவதில் ஆண்களை விட பெண்களே அதிக அக்கறை கொண்டவர்கள் என ஒரு சர்வே ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

வங்கிகளில் கடன்களை வாங்கி அதனை சரியான முறையில் திருப்பி செலுத்துவதில் பெண்கள் தான் முதலிடத்தில் இருப்பதாக ஒரு சர்வே ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. TransUnion எனும் கடன் தரவு தனியார் (சர்வே தயார் செய்யும் நிறுவனம்) ஓர் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கடன் வாங்கி அதனை முறையாக திருப்பி செலுத்துவதில் ஆண்களை முந்தி முதலிடம் பிடிப்பவர்கள் பெண்கள் தான் எனவும், அவர்கள் தான் கடன்களை திருப்பி செலுத்துவதில் அதிக அக்கறை கொண்டுள்ளனர் எனவும் அந்த நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பெண் கடன் வாங்குவோர் விகிதமானது, கடந்த ஐந்து ஆண்டுகளில் 15% வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதுவே ஆண்கள் கடன் வாங்கும் விகிதம் 11% ஆகும்.  TransUnion Cibil சர்வேயின் படி 2017இல் 25% ஆக இருந்த பெண் கடன் வாங்குபவர்களின் பங்கு, 2022 இல் 28%ஆக அதிகரித்துள்ளது.

பெண்களில் 57% பேர், ஆண்களில் 51% பேரின் கிரெடிட் ஸ்கோர் (கடன் திருப்பி செலுத்தும் விகிதம் ) சிறப்பாக உள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.