#Bigbreaking:பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி கொரோனா தொற்றால் உயிரிழப்பு..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி நேற்று மாலை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது.இதனால்,ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும்,கொரோனவால் உயிரிழப்போரின் எண்ணிகையும் அதிகமாகி வருகின்றன.
இந்த நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபென்(80 வயது) நேற்று உயரிழந்ததாக மோடியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் கூறுகையில், “எங்களது சித்தி நர்மதாபென்னுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்னரே மருத்துவமனையில் அவரை அனுமதித்தோம்.கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது தெரிந்தது.அதன்பின்னர் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது.இருப்பினும்,சிகிச்சை பலனின்றி எங்கள் சித்தி இறந்துவிட்டார்”,என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025