கொரோனா சிகிச்சைக்கு 5 லட்சம் வரை தனிநபர்கடன் வழங்குவதாக பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையானது தீவிரமடைந்த நிலையில்,கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க போதுமான பண வசதி இல்லாமல் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால்,மக்களை தொற்றில் இருந்து மீள வைப்பதற்காக,பொதுத்துறை வங்கிகள் கடன் திட்டத்தை அறிவித்துள்ளன. அதன்படி,நாட்டின் பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ,கனரா,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் தனிநபர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கொரோனா சிகிச்சைக்கு 5 லட்சம் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி நேற்று மாலை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது.இதனால்,ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும்,கொரோனவால் உயிரிழப்போரின் எண்ணிகையும் அதிகமாகி வருகின்றன. இந்த நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபென்(80 வயது) நேற்று உயரிழந்ததாக மோடியின் சகோதரர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடியின் […]
கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என புகார் எழுந்த நிலையில், கூடுதலாக 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோன வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என புகார் எழுந்த […]
கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அளித்து வரும் நிலையில், அதற்க்கு கட்டணத்தை நிர்ணயிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தால் இந்தியாவில் 2,26,770 பேர் பாதிக்கப்பட்டு, 6,348 பேர் உயிரிழந்ததாக மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரசுக்கு பல தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், அதற்க்கு கட்டணத்தை நிர்ணயிக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு […]
கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் 10 நாட்களுக்கு மொத்தம் ரூ.2,31,820 வசூலிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தால் ஒரு நாளைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.23,182 வசூலிக்கலாம். சிகிச்சை கட்டணத்துடன் உணவு உள்ளிட்டவற்றிக்காக நாள்தோறும் ரூ.9,600 வரை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை கட்டண விவரங்களை அரசுக்கு பரிந்துரைத்தது இந்திய மருத்துவ கவுன்சில் தமிழக பிரிவு. கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் 10 நாட்களுக்கு மொத்தம் ரூ.2,31,820 வசூலிக்கலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது. […]
தமிழகத்திற்குள் பயணித்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை – தமிழக அரசு மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற பிற மாநிலங்களில் இருந்து ரயிலில் தமிழகம் வருவோர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வந்தாலே அறிகுறி இல்லாதவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்திற்குள் பயணித்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பிற மண்டலங்களுக்கு […]