டிக்டாக், ஷேர்-இட் உள்ளிட்ட 52 சீன செயலிகளை தடை செய்ய வேண்டும்- புலனாய்வு துறை!

சீன செயலிகள் மூலம் பயனாளிகள் விவரங்கள் திருடப்படுவதாகத் புகார்கள் தொடர்ந்து எழுந்துவந்த நிலையில், 52 சீன செயலிகளை தடை செய்ய வேண்டுமென புலனாய்வு துறை மத்திய

சீன செயலிகள் மூலம் பயனாளிகள் விவரங்கள் திருடப்படுவதாகத் புகார்கள் தொடர்ந்து எழுந்துவந்த நிலையில், 52 சீன செயலிகளை தடை செய்ய வேண்டுமென புலனாய்வு துறை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. அதில் குறிப்பாக, “ஜூம்” எனும் விடியோ கால் செயலி. இந்த செயலியில் 50 பேர் வரை விடியோக்கால் செய்யலாம். இதனால் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பலர் இந்த செயலியை பயன்படுத்தி, தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பேசுவது, அலுவலக கூட்டம், போன்றவற்றுக்காக பயன்படுத்தி வந்தனர்.

இந்த செயலியில் முக்கியமான பல தகவல்கள் திருடப்படுவதாக கடும் குற்றச்சாற்றுகள் எழுந்தது. இதனால் ஜெர்மனி வெளியுறவுத் துறை, தைவான் மற்றும் அமெரிக்க நாடாளுமன்றம் ஆகியவை ஜூம் செயலியை உபயோகிப்பதை முற்றிலுமாக தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து நடந்த ஆய்வில் புலனாய்வு துறை 52 செயலிகளை பட்டியலிட்டது. அந்த செயலிகள் பாதுகாப்பற்றவை எனவும், அந்த செயலிகள் மூலம் மக்கள் பலரின் தகவல்கள் திருடப்படுகிறது. இதில் பெரும்பாலானவை, கேமரா செயலி மற்றும் வைரஸ் கிளீனர் ஆகும். இதனால் அந்த செயலிகளை மக்கள் உபயோகிப்பதை தடுக்கவோ அல்லது முழுமையாக தடை செய்ய புலனாய்வு துறை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

எந்த 52 செயலிகள்:

TikTok

Vault-Hide

Vigo Video

Bigo Live

Weibo

WeChat

SHAREit

UC News

UC Browser

BeautyPlus

Xender

ClubFactory

Helo

LIKE

Kwai

ROMWE

SHEIN

NewsDog

Photo Wonder

APUS Browser

VivaVideo- QU Video

Perfect Corp

CM Browser

Virus Cleaner (Hi Security Lab)

Xiaomi-Mi Community

DU recorder

YouCam Makeup

Xiaomi-Mi Store

360 Security

DU Battery Saver

DU Browser

DU Cleaner

DU Privacy

Cheetah- Clean Master

CacheClear DU apps studio

Baidu Translate

Baidu Map

Wonder Camera

ES File Explorer

QQ International

QQ Launcher

QQ Security Centre

QQ Player

QQ Music

QQ Mail

QQ NewsFeed

WeSync

SelfieCity

Clash of Kings

Mail Master

Xiaomi-Mi Video call

Parallel Space

ஆகிய 52 செயலிகளுக்கு தடை விதிக்க புலனாய்வு துறை கோரிக்கை வைத்துள்ளது.