திருமண விருந்தில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் பலி..! 60 பேருக்கு மேல் காயமடைந்தனர்..!
ராஜஸ்தானில் திருமண விருந்தில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் பலி, மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாவட்டம் ஜோத்பூரில் உள்ள புங்ரா கிராமத்தில், நடந்த திருமண விருந்தில், சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தவிபத்தில் விருந்தில் கலந்து கொண்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 60 பேர் காயமடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு படை விரைந்து வந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்து பற்றி மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா “புங்ரா கிராமத்தில் ஒரு திருமணத்தின் போது ஒரு வீட்டில் தீப்பிடித்ததில் சுமார் 60 பேர் காயமடைந்தனர்.
மேலும் காயமடைந்த 60 பேரில் 42 பேர் எம்ஜிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது, இந்த விபத்தானது புங்ராவில் இருந்து மணமகன் ஊர்வலம் தொடங்குவதற்கு முன் நடந்துள்ளது”, என்று கூறியுள்ளார்.