டெல்லியில் மொபைல் போன் கொள்ளையடித்த வழக்கில் 22 வயது பெண் கைது!

A 22-year-old woman has been arrested in Delhi for robbing a woman of her mobile phone.

டெல்லியில் பெண் ஒருவரிடமிருந்து மொபைல் போனை கொள்ளை அடித்த 22 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக டெல்லியில் உள்ள மங்கோல்புரி நகரை சேர்ந்த 72 வயது பெண்மணி ஒருவர், பெண் ஒருவரிடம் இருந்து மொபைல் போனை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து மங்கோல்புரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு குறித்து சுல்தான்பூரி காவலர்கள் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.

காவலர்கள் குற்றவாளிகளை கண்டறிவதற்காக 40-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியதுடன், பல இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களையும்  செய்துள்ளனர். இதனையடுத்து மங்கோல்புரியில் வசிக்கக்கூடிய ஜோதி என்ற பெண்மணி தான் மொபைல் போனை கொள்ளையடித்து சென்றதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஜோதி எனும் பெண்மணி தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.