புல்வாமா மாவட்டத்தில் இன்று அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிக்கன் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலை தேடுதல் வேட்டையில் மேற்கொண்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், இந்த துப்பாக்கிச் சண்டையில் உள்ளூரை சார்ந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
unknown node