இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 13,216 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 12,899 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,32,96,692 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும்,கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 23 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆக குறைந்துள்ளது. மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,855 ஆக பதிவாகியுள்ளது.
அதைப்போல,கடந்த ஒரே நாளில் 8,518 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,26,99,363 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 72,474 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை 1,96,14,88,807 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும்,இந்தியாவில் ஒரே நாளில் 13,24,591 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.