#Breaking:பகீர்…ஒரே நாளில் 11,793 பேருக்கு கொரோனா பாதிப்பு;97 ஆயிரத்தை நெருங்கிய சிகிச்சை!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 17,073 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 11,793 ஆக சற்று குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,34,18,839 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
- நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுசிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 94,420-லிருந்து 96,700 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 27 பேர் இறந்துள்ளனர், இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,047 பேர் ஆக உள்ளது.
- அதைப்போல,கடந்த ஒரே நாளில் 9,486 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,27,97,092 ஆக பதிவாகியுள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 1,97,31,43,19 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 19,21,811 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.