புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவின் ராஜ்புரா பகுதியில் உள்ள உஸ்காம் பத்ரியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நள்ளிரவு என்கவுன்டர் தொடங்கியது. இந்நிலையில், புல்வாமாவில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும், என்கவுன்டர் இன்னும் தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி கொல்லப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
unknown node