வசந்தகுமாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன் – ரஜினிகாந்த் இரங்கல்.!

நடிகர் ரஜினிகாந்த் வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவில், அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும், அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

unknown node