ஜனாதிபதி ஸ்ரீ.ராம் நாத் கோவிந்த்க்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்தியுள்ளார்.
பாஜக கட்சியினை சேர்ந்த ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் அவர்கள் இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக தற்பொழுது பணியாற்றி வருகிறார். அக்டோபர் ஒன்றாம் தேதி1945 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு இன்றுடன் 75 வயது ஆகிறது. இந்நிலையில் இவரது பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் துணை முதல்வராகிய ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மாண்புமிகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாட்டுக்கும் மக்களுக்கும் அவர் அளித்த மதிப்புமிக்க மற்றும் தன்னலமற்ற சேவை தொடரவும் அவருக்கு நல்ல ஆரோக்கியமும், அமைதியும், மகிழ்ச்சியும் கிடைத்திடவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
unknown node