குட்கா உரிமை மீறல் நோட்டீஸூக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கவுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு வந்தது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசை எதிர்த்து, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் 21 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில், அந்த வழக்கு குறித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.