இன்று நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்தநாளையடுத்து பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த குருசாமி (89) எனும் சுதந்திர போராட்ட வீரர் இன்று காலமானார்.
unknown nodeஇவர் உடல்நலக் குறைவு காரணமாக இரவு 12:30 மணியளவில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற நிலையில், காந்தி மீது கொண்ட பற்றால் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர். அதனால் மக்கள் அவரை ‘காந்தி தாத்தா’ என்றே அன்போடு அழைத்து வந்தனர். இந்த கிராமத்து காந்தி தாத்தா, பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே தேசப்பற்றை விதைக்க பாடுபட்டவர்.
இந்நிலையில், இவரது மறைவு கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.