#Breaking:மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு...! இவற்றிற்கெல்லாம் தொடர்ந்து தடை...?

Curfew extended for another week in Tamil Nadu ...! Continued ban on all these ...?

தமிழகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில்,நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.அதன்படி,

மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)

• மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து

திரையரங்குகள்

அனைத்து மதுக்கூடங்கள்

நீச்சல் குளங்கள்

பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்

பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் .

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்

உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றிற்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

unknown node