சாலையில் கிடக்கும் கொரோனா பரிசோதனை மாதிரிகள்! பீதியில் மக்கள்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவ கூடாது என அரசு மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலம் கொத்தாம்பாடியில் சாலையில் விழுந்து கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகளை பார்த்து மக்கள் பீதி  அடைந்துள்ளனர். தலைவாசல் பகுதியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட கொரோனா பரிசோதனை மாதிரிகள், சாலையில் தவறி விழுந்துள்ளது.

ஆனால் மருத்துவ பணியாளர்கள் இதனை கண்டுகொள்ளாமல் சென்றுள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.