சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1240 பேர் குணமடைந்துள்ள நிலையில் உயரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.
இன்று (ஏப்.29) சென்னையில் மட்டும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 767 ஆக அதிகரித்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 82 பேர் வைரஸில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னை மந்தைவெளியில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர், அவரது மனைவி, மகன் மற்றும் மகளுக்கு என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.