3 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு ..?

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இன்று வடகடலோர மாவட்டம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஆகிய மூன்று மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், நீலகிரி, கோவை, திருவாண்ணாமலை, ஆகிய 17 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

மேலும் சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

3 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு ..?