#BREAKING: 10-ம் வகுப்பு தேர்வு வழக்கு ஒத்திவைப்பு.!

பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை  உயர்நீதிமன்றத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த, வழக்கை இன்று காலை விசாரித்த நிலையில்,

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை  உயர்நீதிமன்றத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த, வழக்கை இன்று காலை விசாரித்த நிலையில்,  பிற்பகல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டநிலையில்,    விசாரணை மீண்டும் தொடங்கியது.

உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி வாதிட்டார். அப்போது, வரும் நாள்களில் கொரோனா தொற்று அதிகமாகும் வாய்ப்பு இருப்பதால் தேர்வு நடத்த இதுவே சரியான தருணம் என தமிழக அரசு தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.

நிபுணர்களின் கருத்துப்படி தமிழகத்தில் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கு ஜூன் 11-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழக அரசு கூடுதல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான பிற வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.