தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு கோரிய விண்ணப்பம்! தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு கோரிய விண்ணப்பம்.

தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு கோரிய விண்ணப்பம்.

ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்து தேர்தல்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யக் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர் என இட ஒதுக்கீடு இருப்பது போல, மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக 2016ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதியும், 2017ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியும் பல்வேறு துறைகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.