மக்களிடம் அத்துமீறி நடந்ததாக 80 போலீசார் மீது நடவடிக்கை..டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு.!

திருச்சி சரகத்தில் மக்களிடம் அத்துமீறி நடந்ததாக 80 போலீசார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவுவிட்டுள்ளார்.

திருச்சி சரகத்தில் மக்களிடம் அத்துமீறி நடந்ததாக 80 போலீசார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவுவிட்டுள்ளார்.

காவல் பணியில் இருக்கும்பொழுது மக்களிடம் நடந்து கொண்டு முறை மீது புகார்கள் எழுந்த பேரில் இந்த 80 பேர் பட்டியலில் இருக்கிறது. பொதுமக்களிடம் தொடர்ந்து  புகார் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பவத்துக்கு பிறகு தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவர்களின்  நடத்தை சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.  அதனால் சிகிச்சை அளித்த பிறகே பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிகிச்சை முடிந்து அதில் அவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே களப்பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

மக்களிடம் அத்துமீறி நடந்ததாக 80 போலீசார் மீது நடவடிக்கை..டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு.!