காதலர் தினத்தில் காதலர்களின் அலப்பறைகள்!

Default Image

காதலர் தினத்தன்று காதலர்கள் செய்யும் அலப்பறைகள். 

காதலர் தினம் என்றாலே, அந்த நாளில் இளம் தலைமுறையினரை கையில் பிடிப்பது மிகவும் கடினம். ஏன்னென்றால், அந்த நாள் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட நாளை போல், அனைவருமே படு பிசியாகி அலைவதுண்டு. எப்போதுமே காதலர் தினமானது, பிப்.14-ம் தேதிக்கு முன்னதாகவே 4 நாட்களுக்கு முன்பதாகவே கொண்டாட தொடங்குகின்றனர்.

roseday, kissday, promise day, chocolateday , teddyday, hugday என கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஒவ்வொருவரும் தங்களது காதலர்களுக்கு ஒவ்வொரு நாளுக்கு ஏற்றவாரு பரிசுகளை வாங்கி கொடுத்து மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவதுண்டு.

அந்த வகையில், இறுதியாக எல்லா நாட்களையும் சேர்த்து வைத்து மொத்தமாக பிப்.14-ம் தேதி மிகவும் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். காதலர் தினமென்றாலே, அன்றைய நாளில் அணைத்து பூங்காக்களை ஆக்கிரமித்து விடுகின்றனர்.

காதலர் தினத்தன்று, காதலர்கள் இருவருமே தங்களுக்கு பிடித்தமான பரிசுகள் மற்றும் உணவுகளை பகிர்ந்து கொண்டு, அவர்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்வதுண்டு. இந்த தினத்தை காதலர்கள் மட்டுமல்லாது, முதிர் வயதில் உள்ள ஜோடிகள் கூட மகிழ்ச்சியாக கொண்டாடுவதுண்டு.

காதலர் தினத்திற்கு ஒரு அடையாளமே ரோஸ் பூ தான். அதிலும் அதிகமாக சிவப்பு நிற ரோஜா தான் அனைவரும் பரிமாறி கொள்வதுண்டு. காதலர் தினம் என்றாலே காதலர்களின் அளப்பறை பெரிய அளவில் தான் இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்